ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தை தொடங்கு கிறார்.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர் தல் அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில், கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தல் களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் கமல்ஹாசன் ‘உள்ளாட்சி-உரிமைக்குரல்’ முதல் கட்ட பிரசாரப் பயணத்தை 27- ஆம் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார். 30-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரத்தை தொடர்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.