முக்கியச் செய்திகள் இந்தியா

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் முந்நூறு நாட்களைக் கடந்துள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தின.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27 ஆம் தேதி (இன்று) போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங் கங்கள் என பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், பா.ம.க, தேமுதிக உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று நடக்கும் போராட்டத்திலும் இந்தக் கட்சிகள் கலந்துகொள்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் – நடிகர் பார்த்திபன் ட்வீட்

Gayathri Venkatesan

கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்தறுத்துக் கொலை: மாணவன் வெறிச்செயல்

Ezhilarasan

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

Gayathri Venkatesan