கேரள மாநிலம் மலப்புரத்தில், வீட்டு விலங்கு போல் மனிதருடன் பழகும் காகங்களின் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள வெங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா, விலங்குகளின் மீது அதிக பாசம் கொண்டவராக உள்ளார். இவர் குடியிருப்பு பகுதியில் வரும் பாம்புகளை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவர் காகங்கள் மீது அதிகம் பாசம் கொண்டு அவைகளுக்குத் தினமும் உணவு வைக்கும் பழக்கம் வழக்கமாக வைத்துவந்துள்ளார். இதனால், இவர் வீட்டிற்குப் பல காகங்கள் வந்து உணவு உட்கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ..!’
ஆனால் இரு காகங்கள் இவர் அழைத்ததால் வந்து கையில் அமர்ந்து உணவை உண்டு வருகிறது. இவர் அழைத்தவுடன் எங்கிருந்தாலும் பறந்து வந்து விடுவதாக அவர் கூறுகிறார். அவர் காக்கூ என்று அழைத்தவுடன் வந்து விடுகின்றன. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகிப் பரவலாகப் பரவி வருகிறது.