நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் என்கிற X தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று.
வாழ்த்துவது நமக்குப் பெருமை. இவ்வாறு கமல்ஹாசன் குறிப்பிட்டுளளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







