சின்னசேலம் மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ்

சின்னசேலம் பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தனியார் மஹால், அரசு கட்டடங்களில் பள்ளிக்கூடம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ராமநாதபுரம் அருகே கீழக்கரை…

சின்னசேலம் பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தனியார் மஹால், அரசு கட்டடங்களில் பள்ளிக்கூடம் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில்
வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் ராமநாதபுரம் விருதுநகர் ஆகிய
மாவட்டங்களுக்கு சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தை
பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி துவக்கிவைத்தார்.
தொடர்ந்து, அன்பில் மகேஷ் மற்றும் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர், கீழக்கரையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி கற்கும் நிலை உள்ளது என அறியப்படுகிறது. மத்திய அரசிடம் ரூ. 7ஆயிரம் கோடி கல்விக்காக கேட்கப்பட்டதில் தமிழகத்திற்கு ரூ. 1,300 கோடி முதல் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. அதன் மூலம் பள்ளிகளில் உள்கட்டமைப்பு செய்யப்பட உள்ளது.

தமிழக முழுவதும் 10,031 பள்ளிகள் ஆபத்தான கட்டடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை விரைவில் சரி செய்யப்படும். பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள்
குழந்தைகள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் மன தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உருவாக்க வேண்டும். மாணவர்கள் எந்த சூழ்நிலையையும் எதையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

சின்னசேலம் ஸ்ரீமதி விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தொடர்ந்து
விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி
பாதிக்காத வகையில் தனியார் மஹால், அரசு கட்டடங்களில் பள்ளிக்கூடம்
தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம்
மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திமுக அரசு கொடுத்த பின்பு தண்ணீர்
இல்லா பிரச்சினை தீர்ந்தது. இதனால், அரசுத் துறைகளில் பணியாற்றக் கூடியவர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிடம் கேட்டு பெரும் நிலை உருவாகியுள்ளது.
ஆகையால் கல்வியால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் என்பதை அக்கறை கொண்டு தமிழக அரசு ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறது. சீருடை, நோட்டு புத்தகங்கள் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 60%
கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் கொடுக்கப்படும் என்றார்.

மீன் வளத் துறை மூலம் சுமார் 14 மீனவர்களுக்கு மீன் பதப்படுத்தும் சாதனங்கள், வாகனம் ஆகியவை சுமார் 30 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.