சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3,040-ம், கிராமுக்கு ரூ.380-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




