நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை நேரில் சந்தித்த காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சீர்மிகு தலைமையினை ஏற்று, மக்களுக்கான, மகளிருக்கான மாபெரும் இயக்கமாம் அதிமுகவில் காளியம்மாள் இன்றைய தினம் இணைந்துள்ளார்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







