காளிதாஸ் ஜெயராமின் ‘அவள் பெயர் ரஜ்னி’ டிரைலர் வெளியீடு!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிக்கும்  ‘அவள் பெயர் ரஜ்னி’  படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ்…

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிக்கும்  ‘அவள் பெயர் ரஜ்னி’  படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம்.  அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.

மேலும், லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

இதையும் படியுங்கள்:தங்கம் விலை கிடுகிடு உயர்வு! – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு!

அதனை தொடர்ந்து,  நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில்,  காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாக உள்ள படம்  ‘அவள் பெயர் ரஜ்னி.  தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், துப்பறியும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் படத்தை இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நமிதா பிரமோத் நாயகியாகவும் ரெப்பா மோனிகா, அஸ்வின் குமார், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.  கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.