அதிமுகவால் மக்களுக்குப் பிரயோஜனமில்லை-கே.பாலகிருஷ்ணன்!

அதிமுக ஒற்றைத் தலைமையாக இருந்தாலும், இரட்டை தலைமையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரின் வைர விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட…

அதிமுக ஒற்றைத் தலைமையாக இருந்தாலும், இரட்டை தலைமையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரின் வைர
விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“பிரதமர் மோடி பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கிறார். பாஜகவுக்கு பத்திரிகை சுதந்திரத்தைப் பேசத் தகுதியில்லை. 8 ஆண்டுகளில் பாஜக மக்களை
ஏமாற்றி உள்ளது. மீதமுள்ள 2 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறார்கள் என மக்களுக்கு அச்சம் உண்டாகி உள்ளது. 8 ஆண்டுகளில் ஏராளமான தொழில்கள் முடக்கப்பட்டு உள்ளன.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு
1000 ரூபாய் ஊக்கத்தொகை, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசு
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியை நிரந்தர
பணியிடமாக நிரப்ப வேண்டும். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட
விரும்பவில்லை. அதிமுக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. அதிமுக ஒற்றை தலைமையாக இருந்தாலும், இரட்டை தலைமையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமில்லை.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்பது அண்ணாமலைக்கே தெரியும். தமிழகத்தில்
பாஜக வெற்றி பெறும் எனும் மாயையை அண்ணாமலை உருவாக்கி வருகிறார்” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.