முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Instagram News

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள வருடாந்திர தேர்வு உத்தேச அட்டவணை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:-

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள, 2023 தேர்வு அட்டவணை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, குறைபாடுகளை நீக்கி, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிட வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில், குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்படவில்லை. மொத்தமாகவே 1754 பணியிடங்கள்தான் நிரப்பப்படும் என்பதாக அந்த அறிவிக்கை தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில், ஓராண்டு காலத்திற்கு புதிய நியமனங்கள் மிக சொற்பமாகவே நடக்கும் என்பது அரசுப் பணிகளை பாதிக்கும், இட ஒதுக்கீட்டு உரிமையை பாதிக்கும் என்பதுடன் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை மீது விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிக்கை 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே போல, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகளின் அறிவிக்கையே 2023 நவம்பரில்தான் வெளியாகும், தேர்வுகள் 2024 தான் நடக்கும் என்பதை மாற்றி, 2023 ஆம் ஆண்டிலேயே தேர்வுகள் நடத்த வேண்டும், குரூப் 2 மற்றும் 2ஏ, சிவில் நீதிபதி, உதவி வேளாண்மை அலுவலர் பணிகளுக்கும் அட்டவணை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடக்கும் போட்டித் தேர்வு பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை பெறுகின்றனர். தேர்வுகளை நடத்தினால்தான் அந்த மாணவர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கிட முடியும். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையீடு செய்து, அட்டவணையை திருத்தி வெளியிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

Halley Karthik

புதிய முறையில் தட்டச்சு தேர்வு; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

G SaravanaKumar

ராஜ்நாத் சிங் விளக்கம்: “ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை”-விமானப்படை

Halley Karthik