ஏவிஎம் அலுவலகத்திற்கு சென்றாலே பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும் – ரஜினிகாந்த் பேச்சு….!

ஏவிஎம் சரவணணின் அலுவலகத்திற்கு சென்றாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும்” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளருமான, ஏ.வி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலமானார். ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”ஏவிஎம் சரவணன் ஒரு ஜென்டில்மேன். சென்னை கோடம்பாக்கத்தில் எனக்கு இடம் இருந்தது. முன்னின்று வேலைகள் செய்து அதை ராகவேந்திரா திருமண மண்டபமாக மாற்றியவர் ஏவி.எம்.சரவணன். அசைகிற சொத்து, அசையா சொத்து என்பார்கள். அசையா சொத்துக்கு விலை ஜாஸ்தி. நம் மீது அக்கறை கொண்டவர்கள், நம்மை விரும்புகிறவர்கள் அசையா சொத்து. எனக்கு பாலசந்தர், சோ, பஞ்சு அருணசலம், ஆர்.எம்.வீரப்பன், கலைஞர், சரவணன் என பலர் அப்படி இருந்தார்கள். ஏவிஎம் சரவணணின் அலுவலகத்திற்கு சென்றாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.