ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி : 4வது முறையாக இந்தியா சாம்பியன்!!

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த…

ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதற்கு முன்னர் 3 முறை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியுள்ளன. அதில், 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 2004 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுன் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டியில் களம்கண்ட இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரம் காட்டின.

இதையும் படியுங்கள் : டி.கே.சிவக்குமாரின் இனிப்பு கலந்த சொற்களை நம்பிவிடாதீர்!! – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

அனல் பறந்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நான்காவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.