பிறந்தநாள் கொண்டாடும் ’இசைஞானி’ இளையராஜாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எவர்கிரீன் பாடல்கள் என்றால் அது இளையராஜா பாடல்கள் தான் என்று இன்றளவும் பெரும்பான்மையான மக்கள் சொல்வதை கேட்க முடியும். அப்படி இசை உலகில் தனக்கென தனி முத்திரையை ஆழமாகப் பதித்தவர் இளையராஜா. ’இசைஞானி’ என்று போற்றப்படும் இவர் 1976 ஆம் ஆண்டு வெளியான ’அன்னக்கிளி’ படத்தில் இசையமைத்ததன்மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளையராஜா, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். தலைமுறைகளைக் கடந்த இசையமைப்பாளர் இளையராஜா என்றால் அது மிகையல்ல. மக்கள் விரும்பும் இசையை வாரி வழங்கிய இளையராஜா, அண்மையில் வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இசை உலகின் அரசனாக வலம் வரும் இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2023
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.