இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை இப்படி தாக்குவதா? என அவர் கேள்வு எழுப்பியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக விமர்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மை செய்தி: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?
மேலும், அரசியல் காரணங்களுக்காக இளையராஜா கடுமையான வார்த்தைகளால் அவமதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளரை இவ்வாறு கடுமையாக விமர்சிப்பதுதான் ஜனநாயகமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், தங்களுக்கு மட்டுமே சாதகமாக பேச வேண்டும், செயல்பட வேண்டும் என நினைப்பது எவ்வாறு ஜனநாயகமாகும்? என்றும், மாற்று கருத்துகளை கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவரை அவமதிப்பது எந்தவிதத்தில் சரி? எனவும் எதிர்க்கட்சிகளுக்கு ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வாக்கு வங்கியை முன்வைத்து அரசியல் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








