2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, NielsonlQ நிறுவனத்தின் சென்னை கிளையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், வழங்கப்படும் இந்த விருது, அ.மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையை பாராட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அண்மைச் செய்தி: இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 89 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.