“ஜோரா கைய தட்டுங்க” – யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற…

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இடம்பெறும் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது பல முன்னணி நட்சத்திரங்களால் பாராட்டைப் பெற்ற நடிகராக திகழ்கிறார்.

யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அவரை கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவரது  படங்களிலும் இவருக்கு சிறிய காட்சிகளாவது இருக்கும் அளவுக்கு முக்கியமான நடிகராக தற்போது உருவாகி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் பாவிவுட் ஜாம்பவான் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜவான் படத்திலும் அறிமுகமாகி தனது இருப்பை பாலிவுட்டிலும் உறுதி செய்தார் யோகி பாபு.

இந்த நிலையில் தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்துக்கு ”ஜோரா கைய தட்டுங்க”  எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ப்டத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.