சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் சிறந்த வீரர் விருதுக்கு 3 பெயர்களை ஐ.சி.சி பரிந்துரைத்தது. வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி மற்றும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி ஆகியோரை பரிந்துரைத்தது.
இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஜோமல் வாரிக்கனை வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது. இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.







