பிரபாஸின் ’சலார்’ படத்தில், பிரபல இந்தி ஹீரோ வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘கே.ஜி.எஃப் 1’ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கி இருக்கிறார், பிரசாந்த் நீல். இதில் யஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தை அடுத்து பிரஷாந்த் நீல், ’சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.ஜி.எப், கே.ஜி.எப் 2 படத் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியது.

இதற்கிடையே, இதில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர்களிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படக்குழு அவரை நேரில் சந்தித்து கதை சொன்னதாகவும் அவர் முடிவை விரைவில் சொல்வதாகக் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது