தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் இதுவரை 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்பணியில், அரசு பள்ளி ஆசிரியக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.