வேலை தேடும் இளைஞர்களே… 28 ஆம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதிங்க….!

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

கல்வித்தகுதியை பொறுத்த வரை  8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்களூம் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள்  http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி , https://forms.gle/x48Nu8uZAj3qF8Pc7 என்ற Google Link-லோ தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறு வேண்டுமென்றும் கேட்டுகொள்ளப்பட்டடுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.