டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – ஜிம்பாம்வே அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதே போல மற்றொரு ஆட்டக்காரரான ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். திலக் வர்மாவும் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் ராக்கேட் வேகத்தில் உயர்ந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா, பிளெஸ்ஸிங் முஸராபானி, டினோடெண்டா மபோசா மற்றும் சிக்கந்தர் ராஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
இரண்டாவது அணி
இப்போட்டியில் 256 ரன்கள் குவித்த இந்திய அணி இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைகளில் அதிகபட்ச ஸ்கோர்
260/6 – இலங்கை vs கென் – ஜோபர்க் 2007
256/4 – இந்தியா vs ஜிம்பாப்வே – சென்னை 2026 *
254/6 – மேற்கு இந்திய vs ஜிம்பாப்வே – வான்கடே 2026
235/5 – அயர்லாந்து vs ஓமன் – கொழும்பு – SSC 2026
230/8 – இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா – வான்கடே 2016
229/4 – தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து – வான்கடே 2016
அபிஷேக்கின் அபார அரைசதம்
உடல் நலப்பாதிப்பிற்குள்ளான அப்ஷேக் சர்மா, நடந்து வரும் லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட்டாகினார். மேலும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் அபிஷேக் அரைசதம் விளாசி அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.








