பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Xiaomi Mi 10i ஸ்மார்போன் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.
பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் மொபைல் ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனிடையே வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi 10i ஐ Xiaomi நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தம் புதிய 108 மெகாபிக்ஸல் தரத்துடன் கூடிய கேமராவை கொண்டுள்ள மி 10ஐ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 5ஜி வகை போனின் புதிய வணிக வடிவமாக கருதப்படுகிறது.
Xiaomi Mi 10i சிறப்பம்சங்கள்:
எம்பி பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி
டிஸ்ப்ளே: 6.67 அங்குலம் 16.94CM
RAM: 6GB
கேமரா; முன்புறம் கேமரா: 16MP பின்புறம் கேமரா: 108 MP + 8 MP + 2 MP + 2
மின்கலம்: 4820 mAh
சேமிப்பளவு: 64GB
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
33W பாஸ்ட் சார்ஜிங் வசதி) 4ஜி VoLTE, வைஃபை, மொபைல் ஹாட்ஸ்பார்ட், மேலும் 3 சென்சார்களை கொண்டுள்ளது.
Xiaomi Mi 10i விலை நிலவரம்:
6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Mi 10i ரூ.20,999.
6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Mi 10i
ரூ.21,999
8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Mi 10i ரூ.23,999 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்க அமேசான் மற்றும் Mi ஷோரூம்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







