எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா  மற்றும் ஜிகர்தண்டா படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி…

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா  மற்றும் ஜிகர்தண்டா படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ்,  எஸ்.ஜே. சூர்யா,  இளவரசு,  நிமிஷா சஜயன்,  சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும்  (ராகவா லாரன்ஸ்)  இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும்  (எஸ்.ஜே.சூர்யா)  எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

இதையும் படியுங்கள்:மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

இந்த நிலையில் இப்படம் வெளியான வெளியாகி 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து,  நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்து குறித்து கடிதம் வாயிலாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில்,  “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர்.  கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு.  லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா?  என பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது.  எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம்,  நகைச்சுவை,  குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து,  நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த ஜிகர்தண்டா படக்குழுவினர் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.  எஸ்.ஜே.சூர்யா இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், “தலைவருடனான குறிஞ்சி கணங்கள். உங்கள் கடிதம் மூலம் நாங்கள் நெகிழ்ச்சியானோம்.  மிக்க நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.