ஜீசஸ் மனித நேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடியவர். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக இயேசு இல்லை. அனைவருக்கும் பொதுவானவர் தான் ஜீசஸ் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சுதந்திரப் பொன்விழா அரங்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ” கிறிஸ்துமஸ் தின விழா’ கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆளுநர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,
அனைவருக்கும் ஒரு அற்புதமான மற்றும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசு மனித குலத்தை காப்பாற்ற வந்தார். அவர் மற்றவர்களுக்காக வாழ்ந்தார்.
இயேசு மனித நேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடியவர். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக இயேசு இல்லை. அனைவருக்கும் பொதுவானவர் தான் இயேசு. தம்மை சிலுவையில் அடித்தவர்களை இயேசு மன்னித்தார். இயேசு மனித நேயத்திற்காக வாழ்ந்தார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் பணியாற்றவில்லை, மக்களுக்காக உழைத்தார்.
G20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இந்நேரத்தில் உலகமே இந்தியாவை எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. உலகின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.







