முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சில் தலைவராக ஜெய்ஷா நியமனம்

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)-இன் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட உள்ளார். மேலும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் அடுத்த கூட்டம் ஜெய் ஷா தலைமையில் மார்ச் 2023 இல் நடைபெறும் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டங்களில் கலந்து கொள்ள, ஜெய்ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தலைமையிலான பிசிசிஐ குழு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயம்: தலையில் எட்டு தையல்

Gayathri Venkatesan

உலக தலைவர்களுக்கு பரிசளித்த பிரதமர் மோடி!

G SaravanaKumar

மணிரத்தினம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதால் பொன்னியின் செல்வனை விமர்சிப்பதா? திருச்சி சிவா

G SaravanaKumar