ஜெய்பீம் திரைப்பட விவகாரம்; நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு…

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக் தெரிவித்து, மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த சூர்யா நடித்த ‘வேல்’ திரைப்படம் பாமகவினரால் நிறுத்தப்பட்டது.

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர், ஆற்காடு தெருவிலுள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.