முக்கியச் செய்திகள் பக்தி

மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள்

மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய தயாராகும் பக்தர்கள்.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய செல்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கார்த்திகை 1-ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

அதன்படி, அனைத்து மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொங்குகிறார்கள். இதில் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்ற சரணகோஷம் ஒலிப்பதை கேட்க முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காண வேண்டும்- மதுரைக்கிளை நீதிபதிகள்

Web Editor

சென்னை : திருமணம் தாண்டிய உறவு – மனைவியின் நகைகளை தாரைவார்த்த கணவன்

Dinesh A

ஊடகத்துறையில் ஷண்முகம் பங்கு அளப்பரியது – அண்ணாமலை இரங்கல்

Dinesh A