‘ஜெய் பீம்’ படம் பார்த்தேன் கண்கள் குளமானது” என்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.
https://twitter.com/ikamalhaasan/status/1455435098724069377
இன்று வெளியாகியுள்ள படத்தை படக்குழுவினருடன் பார்த்தார் நடிகர் கமல்ஹாசன், படம் பார்த்த பின்னர் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா மற்றும் ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.







