முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

குறுக்க இந்த ‘ஜார்வோ69’ வந்தா?

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இருவர் பேட்டிங் ஆட தயாரானார்கள். ஃபீல்டிங்க்கு கலம் இறங்கியது இந்திய அணி. ஆனால், 11 பேர் இருக்க வேண்டிய இந்திய அணியில் 12 பேர் இருந்தார்கள். யாருடா அந்த 12வது ஆள் என்று முழித்த போது, இந்திய அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொண்டிருந்தார் இங்கிலாந்து யூ-டியூபர் டேவிட் ஜார்விஸ். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி படு எண்டர்டெயிண்மெண்டாக போக இந்த ஜார்விஸும் ஒரு முக்கிய காரணம்.
ஜார்வோ69 என்ற யூ- டியூப் சேனல் வைத்திருக்கிறார் டேவிட் ஜார்விஸ். ஒன்றரை லட்சம் சப்கிரைபர்கள் அவருக்கு உண்டு. வழிப்போக்கர்களை ப்ரான்க் செய்யும் வழக்கமான யூ-டியூபர் தான் இவரும். இவரது ப்ரான்க்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று உலக ஃபேமஸ் ஆக திட்டமிட்டு இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இரண்டாம் நாள் டெஸ்ட் போட்டியின்போது பாதியிலேயே திடீரென பெவிலியனில் இருந்து ஃபீல்டிங்கிற்கு கலம் இறங்கினார் பார்வையாளர் ஜார்விஸ். அதுவும், இந்தியா ஜெர்ஸி அணிந்து இந்திய அணிக்கு ஃபீல்டிங் உதவி செய்ய வந்தார் இந்த இங்கிலாந்து காரர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மைதானத்துக்குள் சென்று அவரை வெளியேறச் சொன்னபோது, “நான் இந்தியா அணிக் காரன்..பாருங்க என் ஜெர்ஸிய” என அதிகாரிகளையே ப்ரான்க் செய்யப் பார்த்தார். ஒரு வழியாக தரதரவென இழுத்துச் சென்று அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். அதோடு முடியவில்லை. மூன்றாம் நாள் டெஸ்டில் பேட்டிங் ஆட உள்ளே நுழைந்தார். நான்காம் நாள் போட்டியில் பந்து வீசவே வந்துவிட்டார். ஆனால், இம்முறை ஜார்விஸ் பந்து வீசிவிட்டு இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் மீது மோதியதால் விளையாட்டு விபரீதமானது.
இது கிரிக்கெட் ரசிகர்களைக் கொதித்தெழ வைத்தது. ”ஒருவேலை விளையாட்டு வீரர்களை யாரவது வேண்டுமென்றே தாக்கினால் என்ன ஆகும்?”, “கொரொனா காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு விதிமீறல்கள் வீரர்களைப் பாதிக்கும்” என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விலாச ஆரம்பித்தார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். யூடியூபர் டேனியல் ஜார்விஸ், இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை செய்யப்பட்டு யார்க்ஷயர் கவுண்டியால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் தடுப்பூசி வீணாக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Halley karthi

பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!

Jeba Arul Robinson

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா

Saravana Kumar