இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று கொட்டும் பனிமழையில் ஜம்மு காஷ்மீல் தேசிய கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் பயணம் செய்த அவர், காஷ்மீரில் இறுதிக்கட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்றுடன் அவரின் ஒற்றுமை நடைபயணம் நிறைவடைகிறது. இதற்காக
ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சௌக் பகுதியில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, செப்டம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 136 நாள்களா, தனது நடைபயணத்தின் போது தங்களது அன்பையும், ஆதரவையும் அளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி பிரியங்கா மீது பனிக்கட்டிகளை வீசி எறிந்து விளையாடினார். தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ராகுல் நடைபயணத்தை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் இறுதி பயணத்தை எட்டியுள்ளது.
தற்போது நடக்கும் பிரித்தாளும் அரசியல் தேசத்தை பாதிக்கிறது. இந்த அரசியலால் தேசத்திற்கு நன்மை செய்ய முடியாது. ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைபயணத்தை, ஒரு ஆன்மீக யாத்திரை எனலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், என் சகோதரன் காஷ்மீருக்கு வரும்போது, என் அம்மாவுக்கும் எனக்கும் ஒரு செய்தி அனுப்பினான். வீட்டுக்குச் செல்வதில் தனக்கு ஒரு தனி உணர்வு இருக்கிறது என்றார். அவரது குடும்பத்தினர் அவருக்காக காத்திருப்பதாக அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் ராகுலை கண்ணீருடன் கட்டிப்பிடித்தனர். அவர்களின் வலியும், உணர்ச்சிகளும் அதில் தெரிகிறது என்று கூறினார்.