காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லை பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லை பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்ப படை போலீசார் கூறுகையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இந்த துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது. தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.