முக்கியச் செய்திகள் உலகம்

சீன அரசை ராணுவம் கைப்பற்றியதா ?

பெய்ஜிங் விமான நிலையம் 6,000 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், அதிவேக ரயில் டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளன.

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கொள்ளாத சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்ந்ததாக சனிக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதன் படி அதிபர் ஜி ஜின்பிங், செப்டம்பர் 16 அன்று பெய்ஜிங்கில் தரையிறங்கியவுடன் வீட்காவலில் வைக்கப்பட்டதாகக் சில ட்விட்டர் பதிவுகள் கூறுகின்றன. மேலும் பல்வேறு தரப்பு மக்கள் ட்விட்டரில் ஜெனரல் லீ கியாமிங் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவுகள் தெறிவிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைதொடர்ந்து பெய்ஜிங் விமான நிலையம் 6,000 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், அதிவேக ரயில் டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் பல பதிவுகள் திவிடப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து எந்தவொரு சர்வதேச செய்தி நிறுவனத்திடமிருந்தும் உறுதிப்படுத்தும் அறிக்கைகள் எதுவும் வராததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் சீன வெளியுறவு அமைச்சகமும் அமைதியாக உள்ளது.

2012 இல் சீனாவின் அதிபரான ஜி ஜின்பிங் சர்வாதிகாரத்தின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியோடு 2018 ஆம் ஆண்டில், தேசிய மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி பதவிக்கான இரண்டு கால வரம்பை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருகும்படியான சட்டத்தை ஏர்படுத்தினார். அவர் வலிமையான கட்டமைப்பை கவனமாக வளர்த்ததோடு அவருக்கு தேவையான சக்திகளை நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் ஒருங்கிணைத்தார்.

ஜி ஜின்பிங் ஆட்சியின் கீழ், சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தென் சீனக் கடலில் அதன் தொடர்ச்சியான வலிமையை நிலைநாட்டியதில் இருந்து, ஆசிய மற்றும் ஆபிரிக்க முதலீடுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி ஒரு சுமூகமான அதிகாரத்தைப் பிரயோகிப்பது வரை, உலக அரங்கில் சீனா மிகவும் உறுதியுடன் இருக்க அவரின் பங்கு மிக்கபெரியது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

Gayathri Venkatesan

45 ஏக்கரில் விழா மேடை… லட்சம் பேருக்கு கறி விருந்து… அமைச்சர் மூர்த்தி இல்ல விழா

Web Editor

ம.நீ.ம அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு

Gayathri Venkatesan