இப்படத்திற்காகத் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரம்மாண்ட கிராமத்தையே தத்ரூபமாக செட் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தை இயக்குகிறர். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.
இலங்கை போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்கிற கேப்டன் மில்லர் கதையைத்தான் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்த படத்திற்கான முதல் அறிவிப்பாக, தனுஷின் பிறந்த நாளையொட்டி மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்தமோஷன் போஸ்டரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.
இந்நிலையில் அடுத்த மாதம், முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி நிலையில் படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
மிகப் பெரிய பொருட்செலவில் தயாராக்கும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகப் பிரம்மாண்ட கிராமத்தையே தத்ரூபமாக செட் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 38 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இன்னும் படத்தின் படப்பிடிப்பே துவங்காத நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் மூலம் படம் ஏற்கனவே லாபம் ஈட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.








