முக்கியச் செய்திகள் உலகம்

மெக்கா பாதுகாப்பு பணியில் முதன் முதலாக பெண் ராணுவத்தினர்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான நாடான சவுதி அரேபியாவில் சமீபகாலங்களாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக சமூக மாற்றத்தை இளவரசர் முகமது பின் சல்மான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மதினாவில் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் சவுதி ராணுவத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த புனித தலத்திற்கு வரும் யாத்திரிகளின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை சவுதி அரசு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க அரசு தரப்பில் மறுப்பு!

Jeba Arul Robinson

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!

Niruban Chakkaaravarthi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,689 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Jeba Arul Robinson