தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. காளைகளின் நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கவும் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஜல்லிக்கட்டு இணைந்திருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு மிருகவதை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறியுள்ளது.







