ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான் காரணம் என்று அத் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் நெல்சன், நடிகர் வசந்த் ரவி, நடிகை மிர்ணா மேனன், நடிகர் சுனில் வர்மா, ஜாஃபர், கிங்ஸ்லி, ஹர்சத், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், எடிட்டர் நிர்மல், ஸ்டண்ட் சிவா, பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது ஜெயிலர் திரைப்பட நடிகர் வசந்த் மேடையில் பேசியதாவது:
நான் ஏற்கனவே நடித்துள்ள தரமணி, ராக்கி படங்களை தாண்டி ஜெயிலர் என் திரை உலகில் மைல்கல், சூப்பர் ஸ்டாருடன் ஒரு சீன் நடிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும், ஒரே திரையில் நடித்தது மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் அவரிடம் என்ன கற்றுக் கொள்ளப் போகிறேன் என்றுதான் இருக்கும். படம் முடியும் போது மிகுந்த வருத்தமாக இருந்தது.
உங்களை மிஸ் பண்ணுவேன் என்று சொன்ன போது நானும் தான் என்று சொன்ன ரஜினி மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என்றார். அவருடன் தந்தை மகன் என்ற உறவு முறையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. என் வாழ்வில், இதயத்தில் எப்போதும் இந்த கதாப்பாத்திரம் இருக்கும். படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி முக்கியமாக ரஜினிக்கு நன்றி. என்று நடிகர் வசந்த் பேசினார்.
இதனை அடுத்து ஜெயிலர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசியதாவது:
எடிட்டர் நிர்மல், மிகுந்த உறுதுணையாக இருந்தார். எனக்கு இந்த படம் கிடைத்தது ஒரு வரம் தான் அதற்கு நெல்சனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என்று கூறினார்.
இதனை அடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் பேசியதாவது:
இந்த திரைப்படம் இவ்வளவு பெரிதாக வெற்றி பெறும் என்று எடுக்கவில்லை, நினைத்ததை சரியாக எடுக்க வேண்டும் என்றுதான் செய்தோம். இதைத் தாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் கொண்டாடியது தான் பெரிய காரணம். துணை இயக்குநர் போல் உடன் இருந்து ஒளிப்பதிவாளர் விஜய் வேலை பார்த்தார். எடிட்டர் நிர்மல் தான் அதிகம் வேலை பார்த்து உள்ளார். அனைத்து மாநிலங்களில் சிறந்த ரெஸ்பான்ஸ் இருந்தது. நான் நினைத்தது விட படம் நன்றாக வந்துள்ளது என்று ரஜினி சார் சொன்னது மன நிறைவாக இருந்தது.
இவ்வாறு இயக்குநர் நெல்சன் பேசினார்.







