முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

வெளியானது ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஜெயிலர் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஏற்கனவே வெளியான ஜெயிலர் Promo ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பைப் பெற்றுள்ள நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து பாண்டிச்சேரி, கடலூர், நேபாளம் என  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெய்லராக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க சிறைக்குள் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை

G SaravanaKumar

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்

Gayathri Venkatesan

பள்ளியில் மதமாற்ற புகார் : தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ்

EZHILARASAN D