பணியின் போது மது அருந்திய சிறை தலைமைக்காவலர் – வைரலாகும் வீடியோ!

சிறையில் பணியில் இருந்த காவலர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு…

சிறையில் பணியில் இருந்த காவலர் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வாகி தொடர்ந்து வேலூர் மற்றும் ஆயுதப்படை பிரிவிலும் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தொடர்ந்து சிறை கைதிகளைப் பார்க்க வருபவர்களிடம் பணம் பெறுவதாகவும், இரவினில் குடித்துவிட்டு சிறைவாசிகளை அதிக தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

https://www.instagram.com/reel/C0NzsxxsIzi/?igshid=MzRlODBiNWFlZA%3D%3D

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.