ஜெயம் ரவி –  நித்யா மேனன் இணைந்து நடிக்கும் “காதலிக்க நேரமில்லை”  | பர்ஸ் லுக் வெளியீடு!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  ஜெயம் ரவி –  நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு “காதலிக்க நேரமில்லை”  என பெயரிடப்பட்டுள்ளது.   பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக கிருத்திகா…

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  ஜெயம் ரவி –  நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு “காதலிக்க நேரமில்லை”  என பெயரிடப்பட்டுள்ளது.  

பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களை புக் செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என தொடர்ந்து 3 படங்களை ரிலீஸ் செய்துள்ளார். மேலும், அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷ் உடன் அவர் இணைந்து நடித்துள்ள சைரன் படமும் வெளியாகிறது.

மேலும், ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக ரெட் ஜெயண்ட் அறிவித்துள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார். அத்துடன், இந்த படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்திற்கு “காதலிக்க நேரமில்லை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பாடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

https://twitter.com/RedGiantMovies_/status/1729719410401910980

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.