எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தபோதும் அவர் முதலமைச்சராக்கப்படவில்லை. 2010ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக நடை பயணங்கள் மேற்கொண்டு, மக்களை சந்தித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சரானார். தொடர்ந்து அம்மாநில மக்களுக்காக முக்கியமான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சுயமாக அரசியல் கட்சியை தொடங்கி, சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் யார் என்று கேட்டால் எம்ஜிஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என குறிப்பிடுவார்கள். அதே சமயம், மாமனாரிடம் இருந்து கட்சியையும், முதலமைச்சர் நாற்காலியையும் அபகரித்தவர் சந்திரபாபு நாயுடு என விமர்சித்தார்.







