ஐயூஎம்எல் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த…

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து இன்று காலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், “தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில் கடையநல்லூர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது தவிர ஆம்பூர் அல்லது வாணியம்பாடி தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். சென்னை அல்லது சிதம்பரம் தொகுதியை தரும்படி கேட்டதாகவும், அது குறித்தும் மாலை தெரிவிப்பதாக தங்களிடம் கூறப்பட்டதாகக் குறிப்பிட்டார். சென்னையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் அதில் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக” அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.