விமான பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்பதை விமானத்தினுள் அறிவிக்க வேண்டும். அதேபோல் விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த நடைமுறையை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் கடைபிடித்து வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, அந்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சுகாதார அமைச்சகத்துடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், முகக்கவசம் அணியாவிடில் அபராதமோ அல்லது விமான பணியாளர்களின் நடவடிக்கையோ எடுக்கப்படாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் விமான பயணத்துக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.