முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதை காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் இன்று மாலை 5 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. மெட்ரோ பணிகளுக்கான டிரான்பார்மரில் ஏற்பட்ட தீகசிவு பரவியதன் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரயில் பணியின் மின்சாரம் தொடர்பான பணி டிரான்ஸ்பார்மர் மாணவர் விடுதி அறையில் அருகே நடைபெற்று வருவதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவாக சரிசெய்யப்படும்.

இந்தியாவிலேயே அதிகளவில் மருத்துவமனை மருத்துக்கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 லட்சம் புற நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக குறை கூற வேண்டாம். தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிடிபட்ட மக்னா யானை – சீகூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிப்பு

EZHILARASAN D

தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

Halley Karthik

மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது-முதல்வர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar