ஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?

36 வயதான இத்தாலிய நபர் பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால், ஒரே நேரத்தில் குரங்கு அம்மை, கோவிட்-19 மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த 36 வயது உடைய நபர் ஒருவர் ஸ்பெயின்…

36 வயதான இத்தாலிய நபர் பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால், ஒரே நேரத்தில் குரங்கு அம்மை, கோவிட்-19 மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த 36 வயது உடைய நபர் ஒருவர் ஸ்பெயின் பயணத்திற்குப் பிறகு, காய்ச்சல், தொண்டைப் புண், சோர்வு, தலைவலி மற்றும் இடுப்பு பகுதியில் வீக்கம் உள்ளிட்ட பல அறிகுறிகளுடன் இருந்துள்ளார். மருத்துவ சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அந்த நபர், ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை ஸ்பெயினில் ஐந்து நாட்கள் இருந்ததாகவும், அங்குத் தங்கியிருந்த காலத்தில், பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று உறுதியான பிறகு அவருக்கு இடது கையில் சொறி வர ஆரம்பித்துள்ளது. அடுத்த நாள், அவரது உடல், கீழ் மூட்டுகள், முகத்தில் சிறிய நீர்க்கட்டி போன்ற கொதிப்புகள் தோன்றியுள்ளன.

அண்மைச் செய்தி: ‘உ.பி: திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு’

ஜூலை 5 ஆம் தேதிக்குள், இவை மேலும் பரவி தோலில் சிறிய புடைப்புகளாக உருவெடுத்தன. அந்த நபர் உடனடியாக இத்தாலியின் கேடானியாவில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குரங்கு அம்மை, கோவிட்-19 மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.