உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிகள் கொண்ட திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் கடந்த வியாழக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் தீ பற்றியதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மண்டபத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘‘அதிகாரிகள் தங்களின் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்’ – மேற்கு வங்க அரசு’
நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த திருமண மண்டபத்தில் ஏற்பட தீ விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, தீயில் சிக்கிய 7 பேரை மீட்டுள்ளனர். போலீசார் விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.








