சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்​பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்​தர்​கள் தரிசனம் செய்ய அனுமதி​யளித்து அறநிலை​யத் துறை பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து பொது தீட்​சிதர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன, அதேவேளையில் அரசாணைக்கு ஆதர​வாகவும் வழக்​கு​கள் தொடரப்​பட்​டிருந்​தன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிதம்​பரம் கோயில் நிர்​வாகத்​தில் உள்ள சீர்​கேடுகள் களை​யப்​படும் வரை நிர்​வாகத்தை கவனிக்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமாரை உள்ளிட்டோர் கொண்ட இடைக்​கால நிர்​வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும் அக்குழு​வில், முன்​னாள் ஐ.ஏ.எஸ் அதி​காரி ராஜேந்​திரனை உறுப்​பின​ராகவும், பொது தீட்​சிதர்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மற்​றும் இந்து சமய அறநிலை​யத் துறை செயலர் ஆகியோரை அலு​வல்சாரா உறுப்​பினர்​களாகவும் நியமித்தது.

இந்த நிர்வாக குழுவானது, கனகசபையில் நின்று அனைத்து பக்​தர்​களும் சுவாமி தரிசனம் செய்​ய​வும், தேவாரம், திரு​வாசகம் பாடுவதில் சம வாய்ப்பு வழங்​கப்​படுவதையும் உறுதி செய்ய வேண்​டும். அதே நேரம், அன்​றாட பூஜைகள், திரு​விழாக்​களை நடத்​து​வது பொது தீட்​சிதர்​களின் பிரத்​யேக உரிமை என்​ப​தால் அதில் நிர்​வாகக் குழு தலை​யிடாது எனவும், கோயி​லின் அன்​றாட வரவு செலவு கணக்​கு​களை பொது தீட்​சிதர்​கள் ஒவ்​வொரு மாதமும் ஐந்தாம் தேதி நிர்​வாகக் குழு​விடம் ஒப்​படைக்க வேண்​டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து கோயில் பொது தீட்​சிதர்​களின் செயலாளர் ஜெ.ஜெயசூர்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.