ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு விலைபோல் கலந்து கொள்வதறகக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விக்னேஷ் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறைக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் விஜய் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் ரோடு ஷோ சென்றார். வாகனத்தில் நின்றவாறு அவர் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார். ஈரோட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். சாலையின் இரு புறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விழா நடைபெறும் இடமான பெருந்துறை பைபாஸ் சாலை, காஞ்சிகோவில் பிரிவில் உள்ள லட்சுமி நாராயணன் மண்டபத்துக்கு முதலமைச்சர் விஜய் வந்தார். அவரை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், விஜய் பாலாஜி, கலெக்டர் கந்தசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.. அதைத்தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், சேலம் உள்பட 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்த 9 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1, 110 கோடி மதிப்பில் வங்கி கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 3 ஆயிரம் கோடியில் 26 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தொழில் முறை வோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




