“பெண்களின் WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!” – மு.க.ஸ்டாலின்

தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிண்மை மற்று, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையிலில் தமிழ்நாட்டு பெண்களின் WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை என்று முகஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடெங்கும் இன்று திமுக மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.