முக்கியச் செய்திகள் உலகம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெருக்கடியான இந்த தருணத்தில், உலகின் வலிமை வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல், வேறு சில நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி இன்று பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய தரப்பு கோரிக்கையை அடுத்து, பிரதமர் மோடி பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு டெல்லியில் இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது.

அண்மைச் செய்தி: ரஷ்யா-உக்ரைன் போர்: பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயம் – ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்

Gayathri Venkatesan

அரையிறுதிக்கு செல்கிறது நியூசிலாந்து; வாய்ப்பை இழந்தது இந்தியா

EZHILARASAN D

ட்விட்டரில் 20% – 50% கணக்குகள் போலி: எலான் மஸ்க்

Halley Karthik