சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற்ற போது 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டுப்…

சட்டவிரோதமாக சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற்ற போது 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டுப் போட்டதாக கூறி நரேஷ் என்ற திமுக பிரமுகர் தாக்கப்பட்டார். இதையடுத்து நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எட்டுப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் ஜெயக்குமார் மீது, கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ரஷ்யா-உக்ரைன் போர்: பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயம் – ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி

இந்த வழக்கில் தம்மை ஜாமீனில் விடுவிக்கும்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு செய்தார். அவருக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில், ஜெயக்குமாருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் உடனடியாக விடுதலையாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதனால். ஜெயக்குமார் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகம் முழுவது உள்ள வருவாய் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக சார்பில், வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.